யூரிக் ஆசிட்டை குறைக்கும் ஒரே இலை: மருத்துவத்துடன் கூடிய விளக்கம்
பொதுவாக யூரிக் ஆசிட் அளவு அதிகமாகும் பொழுது உடலில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுவது வழமை.
அந்த வகையில், யூரிக் ஆசிட் என்பது நமது உடலில் உற்பத்தியாகும் மற்றும் பியூரின் (Purine) கொண்ட உணவுகள் செரிமானத்திற்குள்ளாகும் பொழுது இயற்கையாக கிடைக்கும் கழிவுப் பொருளாகும்.
இது உடலில் அதிகரிக்கும் பட்சத்தில் ‘ஹைப்பர்யூரிசிமியா’ என்ற அழைப்பார்கள். இதற்கான முக்கிய காரணமாக மோசமான வாழ்க்கை முறை பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் யூரிக் ஆசிட் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாக தெரிந்து கொள்வோம்.
விளைவுகள்
1. உடலில் யூரிக் ஆசிட் உடலில் அதிகரிப்பதால் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் எலும்புகள் பலவீனமடைய ஆரம்பிக்கும்.
2. ஹை யூரிக் ஆசிட் ஆர்த்ரைட்டிஸ் நிலைக்கு வழிவகுப்பதோடு சிறுநீரக கற்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது.
மேலும், ஹை யூரிக் ஆசிட் லெவலை கட்டுபடுத்துவதற்காக வெற்றிலையை மென்று சாப்பிட்டால் சரியாகும் என கூறப்படுகின்றது. இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
வெற்றிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1.வெற்றிலையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முடக்கு வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாக செயற்படுகின்றது.
2. மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியத்தையும், வலியையும் பெருமளவு குறைக்க உதவுகிறது.
3. யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பவர்கள் காலையில் தினமும் வெற்றிலையை மென்று வர வேண்டும். இது யூரிக் ஆசிட் அளவை கணிசமாக குறைக்கும்.
4. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும். இதனால் வாய் துர்நாற்றம் பிரச்சினை வரவே வராது.
5. சீரான குடல் இயக்கத்திற்கும், வாயு தொல்லையைத் தடுக்கவும் வெற்றிலைகள் உதவியாக இருக்கின்றன.
6. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்து ரத்த ஓட்டத்தை வெற்றிலை சீர்படுத்துகின்றது. அத்துடன் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச குடலுக்கு உதவியாக இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |