Viral Video: நாரையிடம் பிடியில் மிகப்பெரிய மீன்! தப்பிக்க அரங்கேறும் போராட்டத்தைப் பாருங்க
நாரை ஒன்று பெரிய மீனை தனது அலகினால் கொத்தி உணவாக்க துடிப்பதும், குறித்த மீன் நாரையிடமிருந்து தப்பிக்க போராடும் காட்சி வைரலாகி வருகின்றது.
நாரையின் வேட்டை
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், பறவைகளின் வேட்டையும் அதிகமாகவே பார்க்க முடிகின்றது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் இங்கு Heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று மீனை வேட்டையாடி உணவாக்க முயற்சிக்கின்றது.
மீன் ஒன்றினை தனது அலகால் குத்தி வேட்டையாடியுள்ள நிலையில், ஒரு கட்டத்தில் மீனை கீழேயும் போட்டுள்ளது. பின்பு அதனை கொத்தி உணவாக்க சிலமுறை முயற்சிக்கின்றது.
கடைசியில் மீனை தனது அலகினால் மிகவும் வேகமாக கொத்தி எடுத்துள்ளது. மீனும் பலமுறை தன்னை காப்பாற்ற முயற்சித்தும் முடியாமல் தோல்வியடைந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |