வெறும் ஏழு நாட்களில் உடலில் ரத்தம் அதிகரிக்கணுமா? இது மட்டும் போதுமே
நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னும் இரத்த சோகை ஏற்படும், இதனால் அதிகப்படியான சோர்வு, இரத்த அழுத்த குறைவு, தலைவலி, மூச்சுத்திணறல், கவனச்சிதறல் போன்ற பல அறிகுறிகள் தென்படும்.
இதற்கு நாம் போதுமான இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும், அப்படி வெறும் 7 நாட்களில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பானம் குறித்து அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்- பீட்ரூட், கேரட், மாதுளம் பழம், தேங்காய் துருவல், பேரீச்சம்பழம்.
செய்முறை
தோல் சீவி, கொஞ்சம் சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொண்ட பீட்ரூட், கேரட் , 1 மாதுளம் பழம், தேங்காய்த்துருவல் 2 ஸ்பூன், பேரிச்சம்பழம் 3 - இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் விழுது போல அரைத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இந்த பானத்தை தயார் செய்து கொள்ளலாம்.
காலை உணவிற்கு பிறகு 1 மணி நேரம் கழித்து இந்த பானத்தை குடிக்கலாம், சர்க்கரை தேன் எதுவும் சேர்க்க கூடாது.
ரத்தத்தின் அளவு சீராக அதிகரித்த பின்பு வாரத்தில் மூன்று நாட்கள் அல்லது இரண்டு நாட்கள் இந்த பாகனத்தை குடித்தால் கூட போதும்.