உடல் எடையை அதிகரிக்கும் பொன்னாங்கன்னி கீரை பொறியலின் இரகசியம்
பொதுவாக ஒல்லிய இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அதற்காக மருந்து பாவனை, ஊட்டச்சத்து மா பாவனை, அதிகமான உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள்.
அந்த வகையில் வீட்டில் சமைக்கப்டும் ஒரு சில உணவுகளிலிருந்து உடல் எடையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பது பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பொன்னாங்கண்ணிக் கீரை. - 200 கிராம்
பாசிப் பருப்பு. - 100 கிராம்
நெய் - தேவையான அளவு

தயாரிப்பு முறை
முதலில் தேவையான அளவு பொன்னாங்கண்ணிக் கீரை எடுத்து, அதனை நன்றாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பாசிப்பருப்பை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின்னர் சுத்தப்படுத்திய பொன்னாங்கண்ணிக் கீரையை இட்லி பாத்திரத்திரத்தின் மேல்தட்டில் வைத்து, பாசிப்பருப்பை இட்லி பாத்திரத்தினுள் போட்டு நீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிலிருந்து வரும் நீராவியில் பொன்னாங்கண்ணிக் கீரையை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஒரு மண் சட்டியில் தேவையான அளவு நெய் ஊற்றி தாளித்து அதில் நீராவியில் வேக வைத்த பொன்னாங்கண்ணிக் கீரையும் பாசிப்பருப்பையும் சேர்த்து ஒன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது பொன்னாங்கண்ணிக் கீரை பொறியல் தயார். செய்த பொன்னாங்கண்ணிக் கீரைப் பொரியலை தினமும் ஒரு வேளை உணவாகவே எடுத்துக் கொள்ளவதன் மூலம் ஒரு மாதத்தில் உடலின் எடையை அதிகரிக்க முடியும்.
இந்த பொறியல் உடலை வலிமையாக்கவும் மற்றும் எலும்புகளின் உறுதிக்கும் உதவுகிறது.
