மணிரத்னத்தின் வங்கி மிகுதி இவ்வளவு தான்! பப்ளிக்கில் குடும்ப சீக்ரெட்டை பகிர்ந்த சுஹாசினி
திருமணத்தின் போது மணிரத்னமிடம் இவ்வளவு தான் பணம் இருந்தது என அதிர்ச்சியான தகவல் சிலவற்றை நடிகை சுஹாசினி பகிர்ந்துள்ளார்.
பிரபல இயக்குநர் மணியின் வளர்ச்சி
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையை இயக்குவதில் மிகவும் பிரபல்யமானவர் தான் இயக்குநர் மணிரத்னம்.
இவரின் திரைப்படங்கள் சமூகத்திற்கு ஏதாவது கூறும் வகையில் தான் இருக்கும்.
மேலும் நாயகன், அக்னி நட்சத்திரம், பம்பாய், ரோஜா, தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய திரைப்படங்களை இயக்கி தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனராக மாறி விட்டார்.
இந்த நிலையில் தற்போது பலக் கோடி வசூலை தன்வசப்படுத்திய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இவர் தான் இயக்கியுள்ளார்.
திருமணத்தின் போது அவரிடம் இருந்த பணம்
இதனை தொடர்ந்து மணிரத்னம் நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகனும் இருக்கிறார்.
இவர் குறித்து அவரின் மனைவி ஒரு பேட்டியில் கண்கலங்கியுள்ளார்.
அதில்,“ என்னை திருமணம் செய்யும் போது மணிரத்னத்திடம் வெறும் 15 ரூபாய் மட்டுமே வங்கியில் இருந்தது. ஆனால் நான் அப்போது பல திரைப்படங்கள் நடித்திருந்தேன்.
மேலும் என்னுடை வங்கி மிகுதி குறித்து இது வரையும் மணிரத்னம் பேசியது கூட இல்லை. அது தான் மணி” என கண்கலங்கியப்படி கூறியிருந்தார்.