யார் இந்த மணிரத்னம்? வெளிவராத சில உண்மைகள்
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வம் திரைப்படம் திரைக்கு வந்து சில மணிநேரங்களில் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் மணிரத்னத்திற்கு மற்றுமொறு வரவேற்பை கொடுத்த படமாகவும் மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி வரலாற்றுப் புனைவு நாவலாகவும் பொன்னியின் செல்வன் பார்க்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றுள்ள மணிரத்னம் யார்? இவரின் படைப்புக்கள் தான் என்ன? இந்த திரைப்படம் ஏன் இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது? என்பது தொடர்பில் இந்த படைப்பை முழுமையாக வாசிப்பதன் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும்.
யார் இந்த மணிரத்னம்?
மணிரத்னம் ஜீன் மாதம் 2ஆம் திகதி 1956களில் கோபால ரத்தினம் என்பருக்கு மகனாக பிறந்தார். இவரது குடும்பத்தில் காணப்படுவர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் சினிமாவில் பிரபலமாக காணப்பட்டார்கள்.
உதாரணமாக இவரது மாமா, 'வீனஸ்' கிருஷ்ணமூர்த்தி - படத்தயாரிப்பாளர், ஜி.வெங்கடேஸ்வரன் - படத்தயாரிப்பாளர், ஜி.சீனிவாசன் - இணைத்தயாரிப்பாளர் போன்றவர்களை கூறலாம்.
இவரது குடும்பம் திரைக்குடும்பமாக இருந்தாலும், வீட்டில் குழந்தைகளுக்கு திரைப்படம் பார்க்க கூட அனுமதி இல்லாமல் இருந்தது.
இவரது குடும்பத்தில் உள்ளவர்கள் திரைப்படம் பார்ப்பதை தீயப்பழக்கமாக கருதியுள்ளார்கள். அந்த நாட்களில் திரைப்படம் பார்ப்பதை நேர விரயமாகவே கருதினேன்' என, அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
ஆனாலும், வளர்ந்த சிறுவனாக திரைப்படம் பார்க்கத் துவங்கியிருக்கிறார். சிவாஜிகணேசனும், நாகேஷும் இவருக்குப் பிடித்த நடிகர்களாவர் இயக்குனர் பாலச்சந்தர் படங்களைப் பார்த்து அவரது ரசிகராக மாறியுள்ளார்.
பின்பு பள்ளிப் படிப்பு முடிந்து, ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில், வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்தார். பிறகு மும்பை ஜம்னலால் பஜாஜ் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மை முதுகலைப் பட்டம் படித்தார்.
முதுகலைப் பட்டம் முடித்து, 1977 ல் சென்னையில் சில காலம் மேலாண்மை ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.
இவரின் படைப்புக்கள் தான் என்ன?
தமிழ் திரையுலகில் (1980)80களின் பிற்பகுதிகளில் தத்ரூபமான மாறுபட்ட கதை அம்சம் கொண்ட காதல், தீவிரவாதம், நாட்டின் நிலவரம், சாமானிய மக்களின் நிலைப்பாடு, பழம்பெரும் புராண கதைகள் ஆகியவற்றை நகர்ப்புற வாழ், நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய திரைப்படம் நுட்பமுறையாக கொண்டிருந்தார்.
இவருடைய திரைபடங்களில் சிறப்பான திரைக்கதையம்சம், நேர்த்தியான தொழில்நுட்பம் மற்றும் சுருக்கமான வசன அமைப்பு கட்டாயம் காணப்படும்.
இவரது முதல் படங்கள் முதலில் வரவேற்பை பெறாவிட்டாலும் தொடர்ந்து இவர் இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியை பெற்றது.
இதனை தொடர்ந்து, நாயகன் (1986), ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகிய படங்கள் இவரது பெயரை உலகலாவிய ரீதியில் கொண்டு சென்றது.
மேலும் ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
திரைப்படம் ஏன் இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது?
மணிரத்னம் மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார்.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகி ரசிகளிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் அதிகாலை காட்சிக்கு அதிகளவில் வந்திருக்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தை காண பேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் வந்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.