மணமகளின் முக்காடை எடுத்து பார்த்து அலண்டு போன மாப்பிள்ளை! தந்தையின் ஆசையால் நடந்த விபரீதம்
தாலிகட்டும் நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டதால் திரென்று மணப்பெண் மாறிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரை சேர்ந்தவர் ரமேஷ் லால். இவருக்கு கோமல், நிகிதா, கரிஷ்மா என்று 3 மகள்கள் உள்ளனர்.
தந்தையின் ஆசை
3 மகள்களுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க ரமேஷ் ஆசைப்பட்டுள்ளார்.
அதன்படியே மூன்று மகள்களுக்கும் மணமகன்களை தேடிப்பிடித்தார். மணமகன்கள் மூன்று பேருமே வேறு வேறு குடும்பங்களை சேர்ந்தவர்கள்.
ராம், கணேஷ், தங்க்வாரா ஆகியோர்தான் அந்த மணமகன்கள்.
शिवराज सरकार में चल रहे बिजली संकट से हुआ अजीबोग़रीब वाक्या…
— Narendra Saluja (@NarendraSaluja) May 9, 2022
उज्जैन के असलाना गाँव में बिजली गुल होने से दो दुल्हन बहने आपस में बदल गयी..
मामाजी , आपकी सरकार के इस बिजली संकट से भांजियाँ भी नही बच पा रही है…
आख़िर सरकार कब नींद से जागेगी , बिजली संकट स्वीकारेगी…? pic.twitter.com/IMC79I46vz
இதையடுத்து திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு ஒரே மேடையில், ஒரே முகூர்த்தத்தில் நேரம் குறிக்கப்பட்டது.
மூன்று மணப்பெண்களும் தலையில் முக்காடு போட்டு மூடி இருந்தனர். அந்த நேரம் பார்த்து கரண்ட் போய்விட்டது. இதனால் திருமண மண்டபம் முழுவதும் போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காணப்பட்டது.
திருமணத்திற்கான நேரமும் நெருங்கிவிட்டதால் இருட்டில் திருமணம் நடந்துள்ளது. அதனால் மணப்பெண்கள் மாறிவிட்டனர்.
முக்காடை திறந்ததும் அலண்டு போன மாப்பிள்ளை
திருமணமும் முடிந்துவிட்டது 3 பெண்களும் தங்களது கணவன் வீட்டிற்கு செல்லும் வரை முக்காடை கழட்டவே இல்லை.
மாமியார் வீட்டிற்கு சென்ற பிறகு முக்காடை திறந்ததுமே மாப்பிள்ளைகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. பிறகுதான், கரண்ட் போய்விட்டதால், மணப்பெண் மாறிவிட்டதை 3 மாப்பிள்ளைக்கும் சொல்லி சமாதானப்படுத்தினர்.
அதன்படியே, அந்த மந்திரம் சொன்ன அதே புரோகிதரை மறுபடியும் வைத்து, மறுபடியும் சடங்கை நடத்தலாம் என்று முடிவானது.. அதன்படியே அந்த புரோகிதர் திருமண சடங்கை நடத்திவைக்க, ஒருவழியாக சம்பந்தப்பட்ட பெண்களுடன் திருமணம் நடந்து முடிந்தது.