கசப்பே இல்லாமல் பாகற்காயை சமைக்க வேண்டுமா? இதை மட்டும் செய்தாலே போதும்
பாகற்காயை கசப்பு இல்லாமல் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் எவ்வாறு சமைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பாகற்காய்
பாகற்காயில் அதிகமான சத்துக்கள் காணப்பட்டாலும் பெரும்பாலான நபர்கள் அதனை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர்.
இதற்கு காரணம் என்னவெனில் அதில் உள்ள கசப்பு தன்மை தான். ஆனால் இந்த கசப்பு தன்மை வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்த பாகற்காயை கசப்பே தெரியாமல் எவ்வாறு சமைக்கலாம் என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் - 500 கிராம்
வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சை - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை ஸ்பூன்
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
கரம் மசாலா - அரை ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
வறுத்த சோம்பு தூள் - 1 ஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1 ஸ்பூன்
வெந்தயம் - ¼ ஸ்பூன்
பெருங்காயம் - 2 சிட்டிகை
கஸ்தூரி மேத்தி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எவ்வாறு சமைக்கலாம்?
முதலில் பாகற்காயை வட்ட வட்டமாக வெட்டி நடவே இருக்கும் விதையை நீக்கிவிட்டு, அதில் 1 ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 1 எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் விட்டு 15 நிமிடம் ஊற வைக்கவும்.
15 நிமிடத்தில் ஊற வைத்த பின்பு, தண்ணீரை பிழிந்துவிட்டு பாகற்காயை தனியாக எடுத்து வைக்கவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும், பாகற்காயை அதில் போட்டு 5 நிமிடம் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் இருக்கும் மீதமுள்ள எண்ணெய்யில் சீரகம், கருஞ்சீரகம், சோம்பு, வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
பின்பு வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
பின்பு வறுத்து வைத்திருக்கும் பாகற்காயை சேர்த்து நன்றாக கலந்து 4 நிமிடம் குறைந்த தீயில் வைத்து சமைக்கவும்.
கடைசியாக ஆம்சூர் பவுடர், கஸ்தூரி மேத்தி போட்டு கிளறிவிட்டு பின்பு இறக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |