நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாகற்காய்! இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் பாகற்காய் அதிகமாக சாப்பிட்டால் சில தீமைகளும் ஏற்படும் என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பாகற்காய்
கசப்புத் தன்மை அதிகமாக கொண்ட பாகற்காய் சிறு குழந்தைகளுக்கு பிடிக்காத காயாக இருந்து வருகின்றது. ஆனால் இதில் இருக்கும் கசப்புத் தன்மை பல மருத்துவ பலன்களைக் கொடுக்கின்றது.
கசக்கும் பாகற்காயில், நார்ச்சத்து, கலோரிகள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
பல ஆரோக்கிய நன்மையை அளிக்கும் பாகற்காயில் சில தீமைகளும் இருக்கின்றது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள் என்ன?
தினமும் காலையில் பாகற்காய் மற்றும் துளசி இலையினை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, இதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா இவை சரியாகுமாம்.
பாகற்காயின் இலையினை தண்ணீரில் போட்டு கொதித்த வைத்து, குறித்த நீரை தினமும் பருகினால், நோய் தொற்று ஏற்படாமல் தப்பிக்கலாம்.
பாகற்காயில் இருக்கும் வேதிப்பொருள் உடம்பில் இன்சுலினை போன்று செயல்படுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவைக் குறைக்க பெரிதும் உதவி செய்கின்றது.
சீறுநீரகத்தில் ஏற்படும் கற்களை நீக்க உதவி செய்யும் பாகற்காய், சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை இவற்றினை பாதுகாக்கவும் செய்கின்றது.
பாகற்காயின் தீமைகள்
பாகற்காயை சரியான அளவில் சாப்பிடாமல் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், வயிறுவலி மற்றும் வயிற்றுப் போக்கு பிரச்சினைகள் ஏற்படும்.
அதே போன்று நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து பாகற்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும். ஆனால் இதனால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் மாற்றம் ஏற்படும் என்பதால் மருத்துவரை கலந்து ஆலோசிப்பது அவசியம்.