சனி ஆழும் 8...8, 17, 26 ம் தேதிகளில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
உலகம் முழுவதும் ஜோதிடத்தை நம்புபவர்களும் நம்பாதவர்களும் கண்டு மிரளும் எண் 8 ஆகும் .
ஏன் எண் 8 ன் மீது மக்களுக்கு இத்தனை பயம் வந்தது? என்பதை விரிவாக பார்க்கலாம்.
எண் 8 க்கு அதிபதி சனிகிரகம் ஆகும். சனி என்றாலே எல்லோருக்கும் பயம்தானே ?
7 1/2 வருடம் எல்லோர் வாழ்வையும் ஒரு கலக்கு கலக்கிவிடுபவர். வாழ்வையும் சனிபகவான். ஓர் கலக்கு அதுமட்டுமல்லாது அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி என்றும் எல்லோருடைய வாழ்விலும் வந்து போகிறார்.

அப்படியானால் 8 ம் எண்ணுக்கு நாம் பயந்துதான் ஆகவேண்டுமா?
சனிபகவானைக் கண்டு பயப்படத் தேவையில்லை. எவன் ஒருவன் தன்னுடைய கடமைகளைச் சரியாகச் செய்கின்றானே அவனை சனி பகவான் ஒன்றுமே செய்ய மாட்டார் என்பது தான் உண்மை.
தான்தோன்றித்தனமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் நடந்து கொள்பவர்களை நல்வழிப் படுத்துவதற்கான சபதம் ஏற்றவர் சனி பகவான். தர்மத்தின் வழி நடப்பவர்களுக்கு துணையாக நிற்பவர் சனி பகவான்.
8ல் பிறந்தவர்களின் குணம்
- உடல் எண் 8 ஆக அமையப் பெற்றவர்கள் கொண்டு சீரான பயணத்தை மேற்கொள்வார்கள்.
- தனக்குத் தகுந்த குரு கிடைக்க வேண்டும் என்று தேடிக்கொண்டிருப்பார்கள்.
- நல்ல ஆலோசகர்களை எப்போதுமே தேடுவார்கள். முப்பது வயதுவரை தங்களது இலக்கு இன்னதென்று அறியாதவர்களாக இருப்பார்கள்.
- நடைமுறைக்குச் சாத்தியமில்லாத விசயங்களில் கவனம் செலுத்துவார்கள்.
- எடுத்த காரியங்களில் வெற்றியடைய யாருடைய தயவையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.
- இவர்களுக்கு வெற்றி சற்று தாமதமாகவே கிட்டும்.