அரிசி மாவில் கோலம் போட சொல்வது எதற்காக? சிலிர்க்க வைக்கும் காட்சி இதோ
வாசலில் அரிசி மாவினால் கோலம் போடப்பட்டுள்ள நிலையில், அதனை சிட்டுக்குருவிகள் கூட்டமாக வந்து சாப்பிடும் காட்சி சிலிர்க்க வைத்துள்ளது.
வீட்டு வாசலில் பெண்கள் கோலம் போடுவதற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதிலும் கோலம் போடுவதை அரிசி மாவில் தான் போட வேண்டும் என்பார்கள்.
இதற்கு பலருக்கும் அர்த்தம் தெரியாமல் இருக்கலாம். அதனை அருமையாக விளக்கியுள்ள காட்சியே இதுவாகும். இங்கு அரிசி மாவு ஒன்றில் கோலம் போடப்பட்டுள்ள நிலையில், நொடியில் சிட்டுக்குருவிகளின் கூட்டம் அங்கு வந்து அந்த அரிசி மாவை சாப்பிடுவதைக் காண முடிகின்றது.
கோலம் அழகுக்கல்ல. பழந்தமிழர்கள் அரிசி மாவில் கோலம் போடச் சொன்ன சூட்சுமம் புரிகிறதா? என்ற கேள்வியுடன் குறித்த காட்சி வைரலாகி வருகின்றது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...