இந்த ராசியினரின் பேச்சாற்றலை அடித்துக்கொள்ள ஆளே இல்லையாம்... உங்க ராசியும் இதுவா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதார நிலை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் எந்த விடயத்தையும் உணர்ச்சி பூர்வமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லும் திறமை கொண்டவர்களாக இருப்பார்களாம்.
அப்படி சிறந்த மற்றும் தனித்துவமான பேச்சாற்றலால் மற்றவர்களை ஈர்க்கும் ஆற்றல் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
இரட்டை இயல்புக்கு பெயர் பெற்ற மேஷ ராயினர் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இவர்களால் தங்களின் பேச்சாற்றலை கட்டுப்படுத்தி வைக்கவே முடியாது. சாதாரணமாகவே இவர்கள் பேச ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார்கள்.
பேச்சு என்பது மிதுன ராசிக்காரர்களுக்கு சுவாசிப்பது போன்றது, மேலும் அவர்களின் விரைவான மனம் உரையாடலைத் தொடர தேவையான போதெல்லாம் அதை சரியான முறையில் சுவாரஸ்யமாக செய்யும் திறமையை கொண்டிருப்பார்கள்.
விவாதங்களை வழிநடத்துவதிலோ அல்லது பயனுள்ள ஒன்றைப் பற்றிப் பேசுவதிலோ அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது மிகவும் சரளமாக இந்த பேசம் திறமை இந்த ராசியினருக்கும் பிறப்பிலேயே இருக்கும்.
மேஷம்
எப்போதும் உக்கிரமாக பேசும் மேஷம் ராசியினர் பார்வைக்கு கோபக்காரர்களை போல் தோன்றினாலும், இவர்கள் பெச ஆரம்பித்தால் மற்றவர்களை நிச்சயம் தங்களின் அடிமைகளாகவே மாற்றிவிடுவார்கள்.
இவர்கள் எந்த விடயத்தை எடுத்தாலும், மிகவும் தெளிவானவும், நேர்த்தியாகவும் பேசும் ஆற்றலை இவர்கள் கொண்டிருப்பார்கள்.
மேஷம் யாரையும், எதையும் கத்தலாம், அவர்கள் தங்கள் கருத்தைச் சொல்லும் வரை அதைச் சொல்வார்கள். யாராவது அவர்களுடன் உடன்படாத பட்சத்தில் உரத்த, நீண்ட விவாதத்திற்கு தயாராகிவிடுவார்ள்.
தனுசு
சாகச உணர்வுகளுக்கு சுதந்திர மோகத்துக்கும் பெயர் பெற்ற தனுசு ராசியினர், இயல்பாகவே இயற்கை விரும்பிகளாக இருப்பார்கள்.
இவர்களுக்கு சுற்றுலா செல்வது, நண்பர்களுடன் இணைந்து சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து உரையாடுவது போன்ற விடயங்களில் அதிகமாக ஈடுபாடு காட்டுவார்கள்.
நேர்மையான, உற்சாகமான மற்றும் நேரடியான, தனுசு ராசிக்காரர்கள் தங்களுக்குப் பிடித்த பாடங்களைப் பற்றி மணிக்கணக்கில் மகிழ்ச்சியுடன் விவாதிப்பார்கள். இவர்கள் ஒரு ஆசிரியராகவோ, மேடை பேச்சாளராகவே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |