பிக் பாஸ் யுகேந்திரனுக்கு அடித்த ஜாக்பாட்... எந்த நடிகருடன் நடிக்கிறார் தெரியுமா?
தமிழ் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்ட யுகேந்திரனுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட யுகேந்திரன், அந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனதும் அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவனின் மகனும், நடிகர் யுகேந்திரனும் பல படங்களில் பாடல் பாடியுள்ளதுடன், வில்லனாகவும் அசத்தினார்.
விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த யுகேந்திரன் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி நியூசிலாந்தில் குடும்பத்துடன் செட்டில் ஆனார்.
பின்பு சினிமா பக்கமே வராத இவருக்கு தற்போது தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சான்ஸ் கிடைத்துள்ள நிலையில், இந்தியா வந்து குறித்த போட்டியில் கலந்து கொண்டார்.
நான்காவது வாரத்தில் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறிய இவர், அவ்வப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மனைவியுடன் சேர்ந்து விமர்சனம் கொடுத்து வருகின்றார்.
மீண்டும் கிடைத்த படவாய்ப்பு
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுகேந்திரன் விஜய்யுடன் திருப்பாச்சி படத்தில் நடித்துள்ள நிலையில் அதன்பின்பு தற்போது 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய்யுடன் நடிக்க இருக்கின்றார்.
இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்குவதாகவும் யுகேந்திரனின் நண்பர் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |