பிக்பாஸில் அதிரடி காட்டிய விக்ரமன் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபல்யமான விக்ரமன் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் பண்ணும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் விக்ரமன்
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இதில் 21 போட்டியாளர்களில் ஒருவராக இருந்து இறுதிவரை வந்து விளையாடியவர் தான் விக்ரமன்.
இவர் தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் டுவிட்டரில் சாதி, மத வெறிக்கு எதிராக அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்து வந்த விக்ரமன், தற்போது பிக்பாஸ் வீட்டிலும் இதையே தொடர்ந்தும் செய்து வருகிறார்.
பிக்பாஸ் வீட்டில் எந்த போட்டியாளர்கள் என்ன தவறு செய்தாலும் அதை தட்டிக்கேட்கும் முதல் ஆளாக இருப்பார் விக்ரமன். இதனால் தான் அசீம் மற்றும் விக்ரமன் இடையில் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும்.
அதிலும் இவர் தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பாரக்கப்பட்டிருந்தது. பிக்பாஸ் மேடையிலும் இவருக்கு ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகி இருந்த வேலையில் டைட்டில் வின்னராக அசீம் கோப்பையை பெற்றதும் விக்ரமனுக்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சியாகி இருந்தது.
வெறித்தமனமாக ஒர்க் அவுட்
பிக்பாஸில் இருந்து வெளியே வந்த விக்ரமன் தற்போது அறம் வெல்லும் என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பத்திருக்கிறார்.
இதில் விக்ரமன், ஏடிகே, ஷிவின், ராம் ஆகிய 4 பேரும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் விக்ரமன் தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று பரவி வருகின்றது.
இவருக்கு தற்போது வேறு ஏதேனும் பட வாய்ப்புகள் இருக்கின்றதா? அல்லது அரசியலில் கவனம் செலுத்தப்போகிறாரா என எந்தகஹ சேகள்விக்கும் இன்னும் பதில் கிடைக்கவில்லை.