பல வருடங்கள் கழித்து பிக்பாஸ் தாமரையை தேடி வந்த முதல் மகன்: மகிழ்ச்சியின் உச்சத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்
பிக்பாஸ் தாமரை தனது முதல் மகனைச் சந்தித்து மகிழ்ச்சியின் உச்சியில் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படமானது தற்போது வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தாமரை
பிக்பாஸ் சீசன் 5இல் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர்தான் தாமரை. இவர் ஒரு நாடகக்கலைஞராகத் தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இவரின் கொஞ்சலான பேச்சு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் மக்களுக்கும் பிடித்துப்போகவே 90 நாட்கள் அந்த வீட்டில் விளையாடி வந்தார்.
இவர் மிகவும் வறுமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர். கடன் பிரச்சினைக் காரணமாகத்தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். ஆனால் 90நாட்கள் வரைதான் அந்த வீட்டில் தாக்குப்பிடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அதே தொலைக்காட்சியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சிறப்பாக விளையாடி அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து அடிக்கடி சமூக வலைத்தளங்கள் பக்கம் வந்து போகும் தாமரை அண்மையில் கூட முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்திருந்தார்.
மகனின் வரவால் மகிழ்ச்சியடைந்த தாமரை
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து தன் மகனை அறிமுகப்படுத்தியிருக்கிறார். தாமரைக்கு அவர் குடும்பத்தினர் ஏற்கனவே திருமணம் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்திருந்தனர்.
அவரால் தாமரை ஆண்குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. சில நாட்கள் அவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
பிறகு தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் தாமரையின் மகன் சிவா தாமரையை சந்திருக்கிறார். இந்த மகிழ்ச்சியான சம்பவத்தை புகைப்படம் எடுத்து பகிர்ந்துக் கொண்டிருந்தார்.
இந்தப் புகைப்படம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.