பிக்பாஸ் சீசன் 6 எப்போது? சர்ச்சை பிரபலங்களின் பட்டியல் ரெடி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
பல சர்ச்சைகள் இருந்தாலும், அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு டாப் ரேங்கில் இருக்கும்.
தற்போது 5 சீசன்களை கடந்து விட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்கவுள்ளது.
போட்டியாளர்களை தேடும் நிர்வாகம்
4 சீசன்களை காட்டிலும் 5வது சீசன் சுவாரசியம் குறைந்துவிட்டதாகவும், எதிர்பார்த்த ரசிகர்களை கவரவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே இந்த முறை போட்டியாளர்களை தேர்ந்தெடுப்பதில் அதீத கவனம் எடுக்கப்பட்டு வருகிறதாம்.
சர்ச்சை போட்டியாளர்கள், அதிக பலத்துடன் மோதக்கூடியவர்கள் என அலசியெடுத்து போட்டியாளர்கள் பட்டியலை தயாரித்து வருகிறார்களாம்.
சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீநிதி, பிரபல தொகுப்பாளினியான டிடி பெயரும் அடிபட்டு வருகிறதாக தெரிகிறது.
நிகழ்ச்சி தொடங்கப்போவது எப்போது?
விரைவில் பிக்பாஸ் சீசன் 6க்கான ப்ரோமோ படப்பிடிப்பு நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நிகழ்ச்சி தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.