வேறொரு பெண்ணுடன் கணவர்... 4 வருடமாக தவிக்கும் பிக்பாஸ் சம்யுக்தா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்த சம்யுக்தா தனது கணவரின் தவறான உறவைக் குறித்து வெளிப்படையாக கூறி வேதனைப்பட்டுள்ளார்.
நடிகை சம்யுக்தா
மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட சம்யுக்தா கடந்த 2020ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார்.
கார்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ரயான் என்ற மகனும் உள்ளனர். மகனுடன் தனியாக வசித்து வரும் இவர், கணவரைப் பிரிந்த காரணயத்தை வெளியே கூறாமல் இருந்து வந்தார்.
சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது உண்மையை உடைத்துள்ளார். இவரது கணவர் துபாயில் இருந்து பணியாற்றி வருகின்றார்.
இவர் பிக்பாஸிற்கு வருவதற்கு இவரது தோழி பாவனா தான் காரணம் என்று கூறியுள்ளார்.
கணவரின் பிரிவு
லாக்டவுனில் துபாயில் இருக்கும் கணவர் 4 வருடமாக வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால், மனமுடைந்து காணப்பட்டதுடன், என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தேன். லாக்டவுன் என்பதால் துபாய்க்கும் போகமுடியாமல் இருந்த தருணத்தில் பாவனாவின் மாமியார் மாமனார் அருகில் இருந்தார்.
அவ்வப்போது அவர்களை பார்ப்பேன்... பாவனா வாக்கிங் வரும் பொழுது பழக்கமானார்.. அவரிடம் நடந்ததைக் கூறினேன்... எங்களது நட்பு தொடர்ந்த நிலையில், என்னை பிக்பாஸிற்குள் பரிந்துரை செய்தது பாவனா தான்... தனது வாழ்க்கை இவ்வாறு மாறி மகிழ்ச்சியாக இருப்பதற்கும் அவர் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
மகன் அப்பாவை பற்றி கேட்கும் போது வெளிநாட்டில் வேலை சம்பந்தமாக பிஸியாக இருக்கின்றார் என்று கூறி வரும் இவரிடம் இரண்டாவது திருமணம் குறித்து கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு முதல் திருமணம் இன்னும் விவாகரத்து முடியவில்லை.. வெளிநாட்டில் இருப்பதால் விவாகரத்து பெற முடியவில்லை.. பலமுறை அழைத்தும் சற்றும் செவி கொடுக்காமல் 4 வருடமாக இருந்து வருகின்றார் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |