பிக் பாஸ் வீட்டில் வனிதா மகள்... கமல் கேட்ட கேள்வி
பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா வந்திருக்கிறார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக ஆரம்பித்த நிலையில், இதில் வனிதாவின் மகளும் உள்ளே சென்றுள்ளார்.
சிறிய வயதிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டிருக்கும் வனிதாவின் மகள் ஜோவிகா மேடையில் ஏறியதும், கமல்ஹாசன் தாய் வனிதா கொடுத்த டிப்ஸ் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஜோவிகா டிப்ஸ் எதுவும் கொடுக்கவில்லை என்று கூறியள்ளார். உடனே கமல்ஹாசன் வனிதாவிடம் டிப்ஸ் ஒன்றும் ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டுள்ளார்.
இதற்கு வனிதா நான் பலமுறை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளேன்... அத்தனை முறையும் தன்னை வெளியே அனுப்பி விட்டீர்கள்... நான் கொடுக்கும் டிப்ஸை கேட்டு எனது மகள் எப்படி ஜெயிக்க முடியும் என்று பதில் அளித்துள்ளார்.
ஜோவிகாவிற்கு படிப்பு வராத காரணத்தை தெரிந்து கொண்டு அவரது தாய் அவருக்கு இஷ்டமானதை செய்வதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.
மேலும் பிக்பாஸ் செல்லும் முன்பு வனிதா கோபமாக இருந்த நிலையில், பிக்பாஸிற்கு பின்பு தனது எப்பொழுதும் சிரித்த முகத்துடனனே இருக்கின்றார் என்று ஜோவிகா பதில் அளித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |