கதிரை பளார் என அறைந்து பாடம் கற்பித்த ஈஸ்வரி... எதிர்பாராத எதிர்நீச்சல் சம்பவம்
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதிரை கன்னத்தில் அரைந்து பாடம் கற்பித்துள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் சொத்தில் 40 சதவீதம் ஷேர் ஜீவானந்தம் பெயரில் இருக்கின்றது.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை பார்வையாளர்களுக்கு மட்டுமின்றி வீட்டில் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
கதிரை அரைந்த ஈஸ்வரி
ஆதி குணசேகரன் காணாமல் போன நிலையில், வீட்டில் நொடிக்கு நொடி பஞ்சம் இல்லாமல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குணசேகரன் இன்று வருவது போன்று காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கதிர் ஈஸ்வரியை தரகுறைவாக பேசியதால், கோபத்தில் பளார் என்று அரைந்து பாடம் கற்பித்துள்ளார்.
மேலும் இன்று வரும் குணசேகரனால் என்னென்ன குளறுபடி அரங்கேறும் என்பது தெரியாமல் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |