பிக்பாஸில் மோசமாக நடந்துகொண்ட போட்டியாளர்! நிகழ்ச்சியினை விட்டு வெளியேறிய மோகன்லால்
மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டதால் கோபமடைந்த நடிகர் மோகன்லால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. ஆரம்பத்தில் ஹிந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் தற்போது 15 சீசன்களை கடந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், தமிழில் 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இதில் அசீம் டைட்டில் வின்னராக வந்தார். தற்போது அடுத்த சீசன் எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மலையாள பிக்பாஸில் நடந்தது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே முதலில் நினைவில் வருவது சண்டை தான். மலையாளத்தில் இந்த வாரம் ஈஸ்டர் வாழ்த்து கூறி நடிகர் மோகன்லால் சீசன் 5 தொடங்கினார்.
இந்த சீசனில் அகில் மாறார் என்கிற போட்டியாளர், தன்னுடைய சக போட்டியாளர்களான ஏஞ்சலினா, மற்றும் சாகர் ஆகியோரை மோசமாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க கூறிய நிலையில், மோகன்லால் கூறிய படி மன்னிப்பு கேட்டார்.
பின்னர் அகில் கையில் இருந்த கேப்டன் பேண்ட்டை சாகரிடம் கொடுக்க சொன்ன போது, அந்த பேண்டை கழட்டி கையில் கொடுக்காமல் தூக்கி வீசினார்.
அகிலின் மோசமான செயலால் கடுப்பான மோகன் லால் வெளியேற முயன்றார். அப்பொழுது பிக்பாஸ் குழுவினர் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளனர்.
பிக்பாஸ் அகிலை அழைத்து அவரை எச்சரிக்கை செய்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.