பிக்பாஸ் கேபியா இது? ஹீரோயின்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு வேற லெவல்... வாயடைக்க வைத்த புகைப்படம்
பிக் பாஸ் கேபிரில்லா முன்னணி நடிகைகளே அசந்து போகும் அளவிற்கு அளவிற்கு, அழகில் மெருகேறி காணப்படுகிறார்.
தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்து பிரபலமானவர் கேப்ரில்லா.
அதன் பின்னர் அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த கேப்ரில்லாவுக்கு ஜாக்பாட் அடித்தது. கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் கேப்ரில்லா பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கேப்ரில்லா, தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.