அஜித்தின் வாட்ஸ் அப் DP என்ன தெரியுமா? அமீர்-பாவனி ஜோடிக்கு அடித்த அதிர்ஷ்டம்
நடிகர் அஜூத்துடன் பிக் பாஸ் காதல் ஜோடியான அமீரும் பாவனியும் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகர் அஜித் நடித்துவரும் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அஜீத்தின் ‘துணிவு’ திரைப்படத்தில் சமீபத்தில் அமீர்-பாவனிரெட்டி ஜோடி இணைந்து உள்ளனர் என்ற தகவல் வெளியானது.

அஜித்துடன் அமீர்-பாவனி ஜோடி எடுத்துக்கொண்ட புகைப்படம்
இந்த நிலையில் தற்போது அஜித்துடன் அமீர்-பாவனி ஜோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
அதில் ஒரு புகைப்படத்தில் அஜித்தே selfie எடுத்து இருக்கிறார். புகைப்படங்களை அமீருக்கு நடிகர் அஜூத்தான் வட்சப்பில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அஜித்துடனான வாட்ஸ் அப் சேட்டை ஷேர் செய்துள்ள அமீர் எனக்கு தேவையான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

அஜித்தின் Dp என்ன தெரியுமா?
அதில் Ak sir என அஜித்குமாரின் பெயரை அமீர் சேமித்து வைத்துள்ளார்.
அமீர் ஷேர் செய்த புகைப்படத்தில் இருந்து அஜித்தின் வாட்ஸ் அப் டிபியை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
கார் ரேஸில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபியாக அஜித் வைத்துள்ளார் .

