பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி பிரிந்து விட்டார்களா? லேட்டஸ்ட் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது வரை காதலர்களாக இருந்த அமிர் மற்றும் பாவனி தற்போது பிரிந்து விட்டார்கள் என்ற பதிவு வைரலாகி வருகின்றது.
அமீர் பாவனி
பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஜோடி தான் அமீர்-பாவனி. இந்நிகழ்ச்சியில் பங்குபற்றிய அனைவருமே ஏதோ ஒரு வகையில் முன்னேற்றமடைந்திருக்கிறார்கள்.
அந்தவகையில் வந்த காதல் ஜோடிகள் தான் அமீர் மற்றும் பாவனி. வைல்ட் கார்ட் என்ரியாக வந்து பாவனி மீது காதல் கொண்டு இறுதி வரை சென்றவர் அமீர்.
பாவனியும் அதே தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து பிரபலமானவர். அமீர் தன் காதலை பாவனியிடம் வெளிப்படுத்தியதும் காதலை ஏற்காமல் மறுத்து வந்த பாவனி நாளடைவில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் குடும்பமாக வாழ்கின்ற வரைக்கும் சென்றிருக்கிறது.
அமீரை பிரிந்தாரா பாவனி
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஜோடியாக பல பதிவுகளை பதிவிட்டு வரும் அமீர் மற்றும் பாவனி தற்போது வெளியான ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்லி வந்துக் கொண்டிருந்த பாவனியிடனம் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா என்ற ஒரு கேள்வி கேட்க அதற்கு ம்ம்ம்... என்று பதிவிட்டிருக்கிறார்.
இவரின் இந்த பதிலைப் பார்த்த பலரும் இதனை வைரலாக்கி இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? என்றுக் கேட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |