பிக்பாஸ் சீசன் 5 தொடக்கம்... கலந்துகொள்ளும் முக்கியமான போட்டியாளர்கள்! புதிய அப்டேட்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் எப்போது? வரும் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது அது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நான்காவது சீசன் தாமதமாக ஆரம்பித்தது போலவே ஐந்தாவது சீசனும் தாமதமாக ஆரம்பிக்க உள்ளது. அனேகமாக அக்டோபர் மாதம் இந்த சீசன் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் ஐந்தாவது சீசனுக்கான லோகோ மற்றும் புதிய டேக்லைன் தயாராகி விட்டதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த சீசனில் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனி, சுனிதா, தர்ஷா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் முரட்டு
சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இனியன், ஆர்ஜே வினோத் மற்றும் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பல ஒருசிலர் சீசன் 5ல் கலந்து கொள்ள போவதாகவும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.