சிறுவனாக இருந்த போதே கொலை செய்யப்பட்ட பிக்பாஸ் அமீரின் தாய்? வெளியான அதிர்ச்சி தகவல்
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 5 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த அக்டோபர் 3-ம் தேதி ஆரம்பித்த பிக்பாஸ் சீசன் 5, மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் துவங்கியது.
இதில் இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, அபிநய், அக்ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் இருந்தார்கள்.
இவர்களில் இசை வாணி, மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, நாடியா சாங், இமான் அண்ணாச்சி, ஸ்ருதி, ஐக்கி, சின்னப்பொண்ணு வெளியேறி விட்டனர்.
இந்நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நடன இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் சஞ்சீவ் வெங்கட் என்ட்ரி கொடுத்தனர், இதில் பலருக்கும் பரீட்சயம் இல்லாத நபராக அமீர் இருந்தார்.

டான்ஸ் அகாடமி நடத்தி வரும் அமீர், பல ரியாலிட்டி ஷோக்களில் ஜோடிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்திருக்கிறார், பல திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் எல்லோரிடமும் மனதில் பட்டத்தை வெளிப்படையாக சொல்லி வரும் அமீர், டாஸ்குகளில் அதீத ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இவரது வாழ்வில் நடந்த மிக சோகமான சம்பவமொன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது, அதாவது அமீருக்கு ஒரு வயது இருக்கும்போதே தனது தந்தையை இழந்துவிட்டாராம்.
அமீர் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது, அவர் தாய் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஆதரவின்றி தவித்த அமீர் தனது சகோதரருடன், அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தாராம்.
மேலும், அமீர் சிறுவயதில் இருந்தே நன்றாக டான்ஸ் ஆடுவாராம். அதனை கண்ட அவரது தாய் நீ கட்டாயம் நடனத்தில் சாதிக்க வேண்டும் என்று கூறுவாராம். தனது தாய்காகவே இவர் நடன இயக்குனராக தற்போது உருவெடுத்துள்ளாராம்.
