பிரம்மாண்ட மாளிகை போல் ஜொலிக்கும் பிக்பாஸ் வீடு! Exclusive Video இதோ
பிக்பாஸ் சீசனுக்கான கொண்டாட்டம் இப்போதே களைகட்டத்தொடங்கிவிட்டது என்றே கூறலாம், பிக்பாஸ் வீட்டின் Exclusive புகைப்படங்கள் வெளியாகி மேலும் பரபரப்பை அதிகரித்துவிட்டது.
விரைவில் தொடங்கும் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு, ஏற்கனவே 5 சீசன்கள் முடிந்துவிட்ட நிலையில் 6வது சீசன் தொடங்கவிருக்கிறது.
கடந்த சீசனில் சுவாரசியம் குறைந்திருந்ததாக நிர்வாகம் முடிவு செய்ய, இந்த முறை போட்டியாளர்களை தேர்வு செய்வதில் அதிக மெனக்கெடல்கள் நடந்துள்ளதாம்.
யார் யார் போட்டியாளர்களாக கலந்துகொள்ள போகிறார்கள், யாருக்கு ஆர்மி தொடங்கவிருக்கிறது என்றெல்லாம் இப்போதே பேசத்தொடங்கியும்விட்டனர்.
மாளிகை போல் ஜொலிக்கும் பிக்பாஸ் வீடு
இந்த சீசனில் பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களில் ஒரு சிலருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ள பிக்பாஸ், இந்த அறிவுப்பு ரசிகர்களிடம் மேலும் உற்சாகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆடம்பர மாளிகை போல் ஜொலிக்கும் பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
இதோ அந்த வீடியோ,