எல்லை மீறிய அசீம்! அமுதவானனை வார்த்தையால் அசிங்கப்படுத்திய காட்சி
பிகபாஸ் வீட்டில் அசீம் எல்லைமீறி செல்வதுடன் சக போட்டியாளர்களை மரியாதை இல்லாமல் பேசுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிக்பாஸ்
கடந்த 9ம் தேதி 21 போட்டியாளர்களுடன் பிரபல ரிவியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு கிடைத்துள்ளது.
இதில் ஜிபி முத்துவிற்கு வேற லெவல் ரசிகர் பட்டாளம் என்றே கூறலாம். ஆனால் அவர் தனது மகனை நினைத்து மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் தானாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்பு இந்த நிகழ்ச்சியின் முதல் எவிக்ஷனாக சாந்தி வெளியேற்றப்பட்டார். தற்போது 19 போட்டியாளர்கள் உள்ள நிலையில் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
எல்லை மீறும் அசீம்
ஜிபி முத்துவின் வெளியேற்றம் குறித்த நிகழ்ச்சியினை பாதிக்கக்கூடாது என்பதற்காக பிக்பாஸ் பயங்கரமாக யோசித்து ஒரு டாஸ்க்கை கொடுத்துள்ளார்.
இந்த டாஸ்க் ஆரம்பத்த நாளிலிருந்து பயங்கர சண்டை ஏற்படுவதுடன், ரசிகர்கள் முகம்சுழிக்கும் அளவிக்கு வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது 3வது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ள நிலையில், இதில் அசீம் அமுதவானனை மரியாதை இல்லாமல் பேசி அசிங்கப்படுத்தியுள்ளார். அசீமின் எல்லைமீறிய கோபம் காண்பவர்களையும் சேர்த்து கோபத்தில் ஆழ்த்தி வருகின்றது.