3 பெண் போட்டியாளர்களின் சதி! கண்கலங்கி அழுத அசீம்: நடந்தது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் கம்பீரமாக அனைவரிடமும் பேசிய அசீம் சக போட்டியாளர்களால் கண்கலங்கியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 9ம் தேதி கோலாகலமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் நிகழ்ச்ச்யில் 20 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர். பின்பு சில தினங்களுக்கு முன்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி கலந்து கொண்டார்.
நேற்று நடத்தப்பட்ட தலைவர் பதவி போட்டிக்கு சாந்தி, ஜனனி, ஜிபி இவர்கள் கலந்து கொண்டு ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவரானார்.
பிக்பாஸ் தலைவரை சக போட்டியாளர்கள் படாதபாடு படுத்தி எடுத்தனர். மேலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து தான் கிளம்புவதாக கூறிவரும் ஜிபி முத்து எவ்வளவு நாள் தாக்குபிடிக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இன்றைய ப்ரொமோ
இன்று வெளியான ப்ரொமோ காட்சியில், புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் நேரம் என்ற பெயரில் ஆரம்பமான டாஸ்க், அசீம் தனது கதையை கூறினார்.
ஆனால் குறித்த நேரத்திற்குள் கதையை முடிக்கும் நபர்கள் அடுத்த வார நாமினேஷனிலிருந்து விடுபடுவார்கள் என்று பிக்பாஸ் கூறியுள்ளார்.
இதில் அசீம் தனது கதையைக் கூறிக் கொண்டிருந்த போது ரக்ஷிதா, சாந்தி, மகாலட்சுமி இவர்கள் பசரை அழுத்தி அசீமை கதையை முடிக்கவிடாமல் செய்துள்ளனர்.
வெளியே வந்த அசீம் கண்கலங்கி அழுதுள்ளார். ஆனால் பசரை அழுத்திய பெண்களில் ரக்ஷிதா, மகாலட்சுமியின் செயல் பார்வையாளர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.