தனலட்சுமியை நெஞ்சோடு தள்ளிவிட்ட அசீம்! முகம்சுழிக்க வைக்கும் எல்லைமீறிய சண்டை
பிக்பாஸ் வீட்டிலிருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், தற்போது நடைபெறும் டாஸ்க் பாரிய சண்டையை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 9ம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிபி முத்து தானாகவே வெளியேறினார். பின்பு சாந்தி மாஸ்டர் மக்களால் வெளியேற்றப்பட்டார்.
இந்த வாரம் புதிதாக பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் எல்லைமீறி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் கடந்த வாரம் அசீம் அதிகமான ரெட் கார்டை வாங்கி மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், தற்போது தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தனலட்சுமியிடம் சண்டையிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் தனலட்சுமியை பொம்மையால் தள்ளிவிட்டு கோபத்தின் உச்சத்திற்கு சென்று விளையாடியுள்ளார்.