Bigg Boss: அதிரடியாக கொடுக்கப்பட்ட ரெட் கார்டு... குற்ற உணர்ச்சியில் காலில் விழுந்த கம்ருதின்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் மோசமாக நடந்து கொண்ட பாரு, கம்ருதின் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்ட நிலையில், குற்ற உணர்ச்சியில் காலில் விழுந்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதுவரை போட்டியாளர்கள் மட்டுமின்றி மக்களும் எதிர்பார்த்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இந்த வாரம் நடைபெற்றது.
இதில் கடைசியாக நடைபெற்ற கார் டாஸ்கில் கம்ருதின், பாரு இருவரும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதுடன், சாண்ட்ராவைக் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

இதில் சாண்ட்ராவிற்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று விஜய் சேதுபதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்துள்ளார். ரெட் கார்டு பெற்ற கம்ருதினை உள்ளே உள்ள போட்டியாளர்கள் அனைவரும் சரமாரியாக பேசியுள்ளனர்.
ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறிக்கொண்டிருக்கிறோம்ல நீ இப்படி நிற்பதற்கு அவள் தான் காரணம்... என்று கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் கம்ருதின் சாண்ட்ரா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
Bigg Boss: ரெட் கார்டுடன் வெளியேறும் பாரு, கம்ருதின்... விஜய் சேதுபதியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம்
ஆனால் பார்வதியோ நின்ற விதமாக தான் செய்தது தவறு தான் என்று மன்னிப்பு கேட்டுள்ளார். ஆக மொத்தம் இன்றைய எபிசோடை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வமாக காணப்படுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |