புதிய ஆண்டில் வெளிநாடு பறக்கும் ராசிகள் யார் யார்னு தெரியுமா?
புதிதாக பிறந்திருக்கும் 2026ம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பினை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், கிரகங்களின் பெயர்ச்சிகள் ஜோதிடத்தில் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் நேர்மறை ஆற்றலை ஏற்படுத்துவதுடன், சிலருக்கு செல்வத்தையும் கொட்டிக் கொடுக்கின்றது.
ஆனால் சில ராசியினர் சிக்கல்களையும் மேற்கொள்வார்கள். அந்த வகையில் இந்த புதிய ஆண்டில் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பினை பெறும் யோகம் எந்த ராசியினருக்கு என்பதை தெரிந்து கொள்வோம்.
கிரகங்களின் இயக்கத்தில் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும். அந்த வகையில் வெளிநாடு யோகத்தினை சில ராசியினர் பெறுகின்றனர்.

தனுசு
தனுசு ராசியினருக்கு பயணம் என்பது தனது வாழ்க்கை இலக்குகளில் ஒரு பகுதியாக இருக்கின்றது. இந்த புதிய ஆண்டு மிக முக்கிய ஆண்டாக இருக்கும்.
புதிய அனுபவங்கள், நீண்ட தூர பயணம் மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகள் அதிகரிக்குமாம். புதன், சூரியன் மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்கள் ஏப்ரல் மற்றும் மே தாங்களில் இணைந்து இருக்கும் போது வெளிநாட்டில் குடியேற அதிக வாய்ப்புள்ளதாம்.
கல்வி, வேலை தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திலும் உச்சத்திற்கு செல்வதுடன், நிச்சயம் வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதாம்.

மிதுனம்
மிதுன ராசியினர் இந்த புதிய ஆண்டில் பிரகாசமாக இருப்பார்கள். ஏப்ரல் மாத இறுதியில் ராகு மிதுன ராசியினுள் நுழைவதால், எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுமாம்.
மே மாத இறுதியில் படிப்பு மற்றும் வேலை விடயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பினை பெறுவீர்கள். மேலும் இதன் மூலம் நிதி நிலைமையும் மேம்படுமாம்.
பழைய கடன்களை அடைப்பதுடன், குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகும் வாய்ப்பும் கிடைக்குமாம்.

கும்பம்
கும்ப ராசியினர் இந்த புத்தாண்டில் ஜுலை மாதத்திலிருந்து பிரகாசமாவார்களாம். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு கிடைப்பதுடன், திருமணம் முடிந்தவர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலா செய்வார்கள்.
அதுமட்டுமின்றி வெளிநாட்டில் புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு உள்ளதால். இதன் மூலமாக உங்களது நிதி நிலையும் மேம்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |