இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை இனி செய்யாதீங்க!
பொதுவாகவே சமையலில் அதிகம் பயன்படுத்தப்டும் பொருட்களின் பட்டியவில் இஞ்சி முக்கிய இடம் வகிக்கின்றது.
சூப்கள் அல்லது கறிகளுக்கு சுவை சேர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலாப் பொருளாக இருக்கும் இஞ்சியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் காணப்படுகின்றன.

இது குமட்டல், அஜீரனம், வீக்கம், உடல் பருமன் மற்றும் வலிமிகுந்த மாதவிடாய் ஆகியவற்றைப் போக்க பெரிதும் துணைப்புரிகின்றதுடன் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள இஞ்சியை பெரும்பாலானவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ள தவறுவதில்லை. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தெளிவான புரிதல் இருப்பதில்லை.

இதனால் விளைவாக சில நேரங்களில் இஞ்சியை பயன்படுத்தினாலும், அதன் முழுமையான பலன்களை நாம் தவறவிடுகிறோம்.
பொதுவாக இஞ்சியைப் பயன்படுத்தும்போது மக்கள் செய்யும் தவறுகள் குறித்தும், அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பது தொடர்பிலும் விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டியவை
1.இஞ்சியை அதிக நேரம் சமைப்பது:இஞ்சியை அதிகத் தீயில் நீண்ட நேரம் சமைப்பது இதில் காணப்படும் பல இயற்கையான சத்துக்கள் அழிந்துவிடுகின்றன. இதனால் இஞ்சியின் சுவையும், ஆரோக்கிய நன்மைகளும் குறைந்துவிடுகின்றன. எனவே இஞ்சியை சமைக்கும் போது, மிதமான தீயில் லேசாக வதக்கி பயப்படுத்தலாம். அல்லது சமையலின் முடிவில் பயன்படுத்துவதால் அதன் காரத்தன்மை மற்றும் மருத்து குணங்களை பாதுகாக்க முடியும்.

2.அதிகப்படியான இஞ்சியைப் பயன்படுத்துவது: பெரும்பாலானவர்கள் அதிகமாக இஞ்சியைப் பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்று நினைக்கின்றார்கள். இது முற்றிலும் தவறான புரிதல். உண்மையில் ஒரே நேரத்தில், அளவுக்கு அதிகமாக இஞ்சியைப் பயன்படுத்தினால், அது வயிற்றுக்குச் சிக்கலை ஏற்படுத்துவதோடு, உணவின் மற்ற சுவைகளையும் கெடுத்துவிடும். எனவே இஞ்சியை பயன்படுத்தும் அளவில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

3. பழைய அல்லது காய்ந்த இஞ்சியைப் பயன்படுத்துவது: சமையலின் போது பழைய, காய்ந்த அல்லது சுருங்கிப்போன இஞ்சியை பயன்படுத்துவது அர்த்தமற்றது. புதிய இஞ்சியில் மிக அதிகமான ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றது. நாள் செல்ல செல்ல அதன் ஆரோக்கிய நன்மைகள் குறைந்துவிடுகின்றது. எனவே இஞ்சியை ஈரப்பதம், நறுமணம் மற்றும் வீரியம் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4.இஞ்சியின் தோலை ஆழமாகச் சீவுவது: பெரும்பாலானவர்கள் இஞ்சியின் தோலை மிகவும் ஆழமாகச் சீவி, தோலோடு சேர்த்து இஞ்சியின் சதைப் பகுதியையும் நீக்கிய பின்னரே சமையலில் பயன்படுத்துகின்றார்கள்.
உண்மையில், தோலுக்கு மிக அருகில் அடியில் உள்ள பகுதியில்தான் அதிக சுவையும், மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துக்களும் அதிகம் இருக்கும். எனவே இஞ்சியை பயன்படுத்தும் போது இந்த தவறை தவிர்த்துக்கொள்வது முக்கியம்.

5.தவறான நேரத்தில் : சமையலின் போது, இஞ்சியை சேர்க்கும் நேரம் தான் மிகவும் முக்கியம்.பருப்பு அல்லது காய்கறிகள் சமைக்கும் போது, மிகவும் முன்னதாகவே இஞ்சியைச் சேர்த்துவிட்டால், அதன் தனித்துவமான காரச் சுவை குறைந்துவிடும். அதே சமயம், சமையலின் முடிவில் இஞ்சியைச் சேர்த்தால், அது மிகவும் காட்டமாக மாறிவிடும். எனவே சமையலை முடிப்பதற்கு சிறிது சேரத்திற்கு முன்னர் இஞ்சியை சேர்ப்பதே சிறப்பு.இதனால் இஞ்சியின் சத்துக்களையும் சுவையையும் முழுமையாக அனுபவிக்க முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |