வெளியில் வந்தும் ஆசை அடங்காத சரவண விக்ரம்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்- வைரல் காணொளி
வெளியில் வந்தும் டைட்டில் வின்னர் ஆசையை விடாமல் சரவண விக்ரம் சுற்றித் திரிகிறார்.
பிக்பாஸ்
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
மற்ற சீசன்கள் போல் அல்லாமல் இந்த சீசனில் நாட்கள் மளமளவென 75 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் போட்டியாளர்கள் தங்களிடம் உள்ள வன்மத்தை வைத்து நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அத்துடன் அடிக்கடி போட்டியாளர்கள் ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது.
பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சியை விட்டு சென்ற பிறகு இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள் என்று தான் பேசப்பட்டது.
டைட்டில் வின்னர்
இந்த நிலையில் கடந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று சரவண விக்ரம் வெளியேறியுள்ளார்.
டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சரவண விக்ரம் பாதியில் வெளியேறிய அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் வெளியில் வந்த விக்ரம், “ டைட்டில் வின்னர் சரவணன் விக்ரம் என்று எல்லோருமே அழைக்கிறார்கள். நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு நான் ஒரு மாலுக்கு சென்றிருந்தேன்.
அப்போது அங்கு வந்த ஒருவர், என் கையை தூக்கி உண்மையான டைட்டில் வின்னர் நீங்கள் தான் என்று கூறியிருந்தார்.” இப்படியான போலியான கருத்துக்களை பரப்பி வருகிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன் “ பிக்பாஸை விட்டு வெளியில் வந்தும் திருந்தாத சரவண விக்ரம்..” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |