விஜய் பட நடிகை இஷாவை ஞாபகம் இருக்கா? திருமணத்திற்கு பின் எப்படி இருக்காங்க பாருங்க
நடிகர்கள் விஜயகாந்த், விஜய், பிரஷாந்துக்கு ஜோடி போட்ட நடிகை இஷாவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இஷா கோபிக்கர்
தமிழ் சினிமாவின் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் இஷா கோபிக்கர்.
இவர், “காதல் கவிதை” படத்தில் நடிகர் பிரஷாந்திற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்த படத்தினை தொடர்ந்து பிரஷாந்த், விஜய், அரவிந்த்சாமி, விஜயகாந்த் என பிரபல ஹீரோக்களுக்கு ஜோடி போட்டார்.
கோலிவுட்டை விட பாலிவுட்டில் தான் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என பல மொழிகளில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இஷா 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் திம்மி நரங்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ரீ-என்றி கொடுக்கும் பிரபலம்
இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். சினிமா போல் அரசியலிலும் அதிகம் நாட்டம் கொண்டவர் இஷா.
திருமணமாகி 14 வருடங்கள் ஆகின்ற நிலையில், இவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள்.
விவாகரத்தை தொடர்ந்து காணாமல் போய் விடுவார் என எதிர்பார்த்த வேளையில், பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் படத்தில் நடித்து மீண்டும் ரீ-என்றி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இஷாவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன் “ இஷாவா இது?” என கருத்துக்களையும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |