பிக்பாஸ் வீட்டில் வனிதா எண்ட்ரியா? நடுநடுங்கிப் போன ஃபினாலே போட்டியாளர்
பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா வந்துவிட்டால் என்ன செய்வது என்று போட்டியாளர்கள் நடுநடுங்கிப் போய் உள்ளனர்.
பிக்பாஸில் வனிதா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், 7 போட்டியாளர் விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் கடைசி நாமினேஷனில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பழைய சீசன் போட்டியாளர்கள் உள்ளே சிறப்பு விருந்தினராக எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் சுரேஷ் தாத்தா பிக்பாஸிற்குள் வருகை தந்த நிலையில், இன்று வி.ஜே பார்வதி வருகை தந்து மைனா நந்தினியை வறுத்தெடுத்துள்ளார்.
மேலும் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா உள்ளே வருவார் என்று எதிர்பார்க்கப்பபடும் நிலையில், போட்டியாளர்கள் அச்சத்தில் காணப்படுகின்றனர்.
வனிதா குறித்து இரவில் விவாதம் மேற்கொள்கையில், அசீம் ’வனிதாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன், அவர் வந்தால் வீடே கலகலப்பாக இருக்கும்’ என்று கூறினார்.
ஆனால் இதற்கு அமுதவானன் அச்சத்துடன் வனிதாவின் வரவை நான் நீங்கள் மட்டும் எதிர்பாருங்கள், எங்களுக்கெல்லாம் வேண்டாம் என்றும் வந்தால் ஒளிந்து கொள்வேன்... அவரிடம் பேசவே மாட்டேன் என்று கூறியதால், சக போட்டியாளர்கள் சிரித்துள்ளனர்.
குறித்த காட்சியினை இங்கே காணலாம்.
Whole gang waiting for Vanitha entry ???? Satyama mudiyala sirichi sirichi ??? #biggbosstamil6 #VaathiVikraman #AramVellum #VoteForVikraman #Vikraman?#Vikraman_Hero_Of_BBTamil6 #BiggBoss6Tamil #BiggBossTamil #vikraman #BiggBossTamil6 pic.twitter.com/c26BSR42Mn
— Kapes (@kapespapa) January 9, 2023