பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் கணவர் பற்றி பேசிய ரக்ஷிதா!
பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் வெளியேறிய ரக்ஷிதா மகாலட்சுமி தன்னுடைய கணவர் குறித்து பேட்டியொன்றை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையின் நட்சத்திரம்
பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்துக் கொண்டதிலிருந்து சேவ் கேம் விளையாடும் போட்டியாளராகவே குற்றஞ்சாட்டபட்டு வந்தார் ரக்ஷிதா மகாலட்சுமி.
இவர் 'சரவணன் மகாலட்சுமி“ தொடரின் மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார்.
இவர் பட்டிதொட்டியிலிருக்கும் சீரியல் பிரியர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாற்றப்பட்டார் என்றே கூற வேண்டும்.
காதல் திருமணம்
இந்நிலையில் இவர் “பிரிவோம் சந்திப்போம்” மற்றும் “நாச்சியார்புரம்” ஆகிய தொடர்களில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2013 ஆம் திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்கள் திருமணம் செய்து சுமார் ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்பும் கருத்துவேறுபாட்டால் இவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
ரக்ஷிதாவிற்கு ஒரு கம்பேக் கொடுக்கும் வகையில் பிக் பாஸ் இவரை ஒரு போட்டியாளராக சீசன் 6 ல் உள்நுழைத்துக் கொண்டுள்ளது.
ரக்ஷிதாவின் கணவர் குறித்து சில கருத்துக்கள்
இந்நிலையில் நேற்றைய தினம் குறைவான வாக்குகள் பெற்ற போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிலிருந்து எதிர்பாராதவிதமாக ரக்ஷிதா மகாலட்சுமி வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து இவர் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றிகள் தெரிவித்தும் தன்னுடைய சுபாவம் குறித்தும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "தனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இன்னும் சிலர் எனக்கு ஆதர்வளிப்பார்கள் என நான் நம்பவில்லை. ஆனால் ஆதரவளித்தற்கு நன்றி" என கூறியுள்ளார்.
மேலும் "யாரையும் இப்படித்தான் என்று பார்த்ததும் ஜட்ஜ் பண்ண கூடாது. இதை நான் இப்போதுதான் புரிந்து இருக்கிறேன்" என்றும் கூறியிருக்கிறார்.
ரக்ஷிதாவின் இந்த பதிவு ரசிகர்களுக்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. 'மீண்டும் இவருடைய கணவர் தினேஷ்வுடன் இணைந்து வாழப்போகிறார்" என்றும் 'இவர் மனதிலும் கணவருக்கான இடம் இருக்கிறது" என்றும் நேர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.