பிக்பாஸ் வீட்டிற்குள் சுரேஷ் தாத்தா! முதல் பைனலிஷ்ட்டாக சென்றவரின் பரிதாபம்
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீசன் 5ல் கலந்துகொண்ட சுரேஷ் தாத்தா சிறப்பு விருந்தினராக உள்ளே வந்து அதிரடி காட்டியுள்ளார்.
வச்சி செய்த சுரேஷ் தாத்தா
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் டிக்கெட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்று அதில் அமுதவானன் வெற்றி பெற்று முதல் பைனலிஸ்டாக சென்றுள்ளார்.
நேற்றைய தினத்தில் அசீமை போட்டியாளர்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனும் மிகக்கடுமையாக விமர்ச்சித்தார். இந்நிலையில் இன்று அனைத்து போட்டியாளர்களும் அசீமை நாமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்நிலையில் சுரேஷ் தாத்தா பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் கொண்டு வந்த பரிசு பொருட்களை சக போட்டியாளர்கள் கையில் கொடுத்து அவர்களை தாறுமாறாக கலாய்த்து தள்ளியதோடு, தனது பாணியில் விமர்சித்தும் உள்ளார்.
சுரேஷ் தாத்தா உள்ளே வந்த தனது வேலையைக் காட்ட ஆரம்பித்த நிலையில், பார்வையாளர்கள் செம்ம ஹேப்பியில் மூழ்கியதோடு, கருத்துக்களையும் தாறுமாறாக பதிவிட்டு வருகின்றனர்.