பிக்பாஸ் அல்டிமேட்டில் அதிரடி என்றி கொடுத்த இரண்டு போட்டியாளர்கள்.... கடும் ஷாக்கில் சினேகன்!
பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் இன்று முதல் கமலுக்கு பதில் சிம்பு தொகுத்து வழங்கினார்.
முதல் நாளிலேயே போட்டியாளர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கவர்ந்து விட்டார் சிம்பு.
போட்டியாளர்கள் அனைவரும் சிம்பு தான் புதிய ஹோஸ்ட் என ஏற்கனவே யூகித்து வைத்திருந்ததாக கூறினர். போட்டியாளர்களிடம் தனித்தனியாக பேசி, அனைவரையும் ஜாலி மூடிற்கு மாற்றினார்.

கரகாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற இசை மற்றும் நடனத்துடன் சிம்புவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வாரம் டிரெண்டிங் பிளேயர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இரண்டு வைல்கார்டு என்ட்ரிகளாக கலக்க போவது யாரு சதீஷ் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். சுரோஷ் தாத்தாவை பார்த்த சினேகன் உட்பட பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
இன்று சிம்பு வந்ததை முன்னிட்டு இந்த வாரம் நோ எவிக்ஷன் என அறிவிக்கப்பட்டது.
கடந்த வாரம் ஷாரிக் மற்றும் அபினய் அனுப்பப்பட்டதை போல் இந்த வாரமும் டபுள் எவிக்ஷனுக்கு தான் பிக்பாஸ் முடிவு செய்திருந்தாராம். ஆனால் சிம்பு வந்து பேசிய பிறகு அது சிங்கிள் எவிக்ஷனாக மாற்றப்பட்டதாம்.
பிறகு சிம்பு வந்த முதல் நாளே கஷ்டமான விஷயத்தை அறிவிக்க வேண்டாம் என நினைத்த பிக்பாஸ், இந்த வாரம் எவிக்ஷன் வேண்டாம் என முடிவு செய்து விட்டார்களாம்.