சிம்புவை கண்ணீர் விட வைத்த தீனா....நொடியில் காலில் விழுந்த சாண்டி!
சிம்பு தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ள நிலையில் மீண்டும் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் போட்டியாளர்களை சந்தித்த சிம்பு ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பையும் விடுத்திருந்தார்.
சாண்டி மற்றும் தீனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர். இதனால் வீடு நகைச்சுவையால் நிரம்பியுள்ளது.
நமக்கு சோறு தான் முக்கியம்.... உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்! எச்சரிக்கை

இதனை ரசிகர்கள் விரும்புவதால் இந்த வாரம் முழுவதும் இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருவரும் இருப்பார்கள் என்பதை சிம்பு அறிவித்தார்.
இதனை பார்த்த சாண்டி குருநாதா இல்லை.... வேண்டாம் என்று கீழே விழுந்து நகைச்சுவையாக மன்றாடினார்.
உடனே தீனாவும் வந்து விழுகின்றார். பிறகு இருவருக்கும் டாஸ்க் கொடுத்தார் சிம்பு.

குறும்படங்களுக்கு இருவரும் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார். உடனே இறுவரும் குறும்படங்களுக்கு குரல் கொடுத்து சிம்புவை சிரித்தே கண்ணீர் சிந்த வைத்து விட்டனர். அதுவும் தீனாவின் காமெடி சிம்புவை மட்டும் இல்லை ரசிகர்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.
டாஸ்க்கை வெற்றியாக செய்து முடித்தமையால் சாண்டியையும், தீனாவையும் பிக் பாஸ் மற்றும் சிம்பு இணைந்து வழியனுப்பி வைத்தனர்.




