மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் நுழையும் பிரபலம்! சீக்ரட் ரூம் டுவிஸ்ட்... சற்றுமுன் வெளியான தகவல்
பிக் பாஸ் வீட்டிற்க்குள் மீண்டும் தனலெட்சுமி வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் முதலிடத்தை பிடிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தற்போது ஆரம்பித்து தற்போது ஆறாவது சீசன் செல்கிறது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.
இந்நிலையில் பிக் பாஸில் ஓட்டிங் அடிப்படையில் சுமார் 12 போட்டியாளர்கள் குறைவான வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் தனலெட்சுமி வெளியேற்றப்பட்டார். இவருக்கு நாட்கள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
தலைமறைவாக இருக்கும் பிரபலம்
இவர் வெளியேறிய பின்னர் சமூக வலைத்தளங்களில் எவ்விதமான தகவல்களையும் வெளியிடவில்லை.
மேலும் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் பயணம் குறித்து பேட்டியளித்துள்ளனர்.
ஆனால் தனலெட்சுமி குறித்து எந்தவிதமான கருத்தை குறித்த தொலைக்காட்சி வெளியிடவில்லை.
சீக்ரெட் ரூம்
இதனால் ரசிகர்கள் தனலெட்சுமி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனலெட்சுமி சீக்ரட் ரூமில் இருப்பதாகவும் இவர் விரைவில் பிக் பாஸ் வீட்டிகுள் வருவார் எனவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த வாரம் தனலெட்சுமி மீண்டும் களமிறங்கி தன்னுடைய முழு பங்களிப்பை வழங்குவார் என நெட்டிசன்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.