குறும்படத்தில் கிழிந்த தாமரையின் முகத்திரை..... மெல்ல மெல்ல வெளிவரும் உண்மைகள்!
முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சூடு பிடித்து இருக்கிறது.
தாமரை இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் முன்பை விட திறமையாக விளையாடி வருகிறார் என்று சொல்லலாம். திறமையாக அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை அதிகமாக பாலாஜி, ஜூலி, அனிதா, அபிராமி இவர்களுடன் தன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
அவர்களுடன் பொழுதை கழிப்பது மட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
Thamarai about RAJU?
— Chimchar (@inferna63786672) February 15, 2022
Thamarai says Raju didn’t treat her the same outside and didn’t call her so how did Thamarai speak to Sivakarthikeyan? ??#BBUltimate #BiggBosstamil #BiggBossTamil5 #priyanka #Raju #BiggbossUltimate #BalajiMurugadoss #Julie pic.twitter.com/w54nxYBS4w
அப்படிதான் அனிதாவிடம் தாமரை நிகழ்ச்சியின்போது பிரியங்கா நடந்து கொண்டதையும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரியங்கா நடந்து கொண்டதையும் ஷேர் செய்தார். அதே போல ராஜூ பிக் பாஸிற்கு பிறகு மாறி விட்டதாகவும் ஒரு கால் கூட பண்ணி பேச வில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ராஜு மூலம் தான் சிவகார்த்திகேயன் தாமரையிடம் பேசியதாகவும், போனில் பேசிய சிவா அவரின் அம்மா தாமரை ஃபேன் என்று கூறியதாகவும் தாமரை சந்தோஷம் கலந்த பிரமிப்புடன் கூறியதாகவும் இருந்தார்.
இப்படி தற்போது பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதே தாமரை சில தினங்களுக்கு முன்பு ஜூலி மற்றும் பாலாஜியிடம் மனம் விட்டுப் பேசும் போது ராஜு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஆளே மாறிவிட்டார். போன் செய்து கூட பேசவில்லை.
அவரை நான் என்னுடைய மூத்த மகன் போல் நினைத்தேன் என்றெல்லாம் பேசி இருந்த தாமரை தான் ராஜு மூலம் சிவகார்த்திகேயன் போனில் பேசினார் என்று சொல்கிறார். இப்படி மாற்றி மாற்றி தாமரை பேசி இருப்பதால் ரசிகர்கள் தாமரைக்கு எதிராக எதிர்மறை விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.