சகுனி வேலைப்பார்க்கும் விஷால்- பட்டப்பெயராக மாற்றிய Housemates.. நாமினேஷனில் சிக்குவாரா?
பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு பட்டபெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 8
தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில், ஹீரோவாகவும் - வில்லனாகவும் பிரபலமான விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.
உலக நாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசனாக தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
எனவே கமலஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை யார்? தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக விஜய் சேதுபதிக்கு ரூ.15 கோடி ரூபாய், சம்பளமாக வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது.
தற்போது 9 வாரங்களை கடந்து 10 வாரத்தில் நுழைந்துள்ள பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்றைய தினம் சாச்சனா மற்றும் ஆனந்தி இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பட்டப்பெயர்களால் அடையாளம் காட்டப்படும் போட்டியாளர்கள்
இந்த நிலையில், 10 வாரத்திற்கான முதல் நாமினேஷன் செயன்முறை தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.
நாமினேஷன் காரணத்தை அடிப்படையாக வைத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பட்டப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பிக்பாஸ் வீட்டின் சகுனியாக விஷால், பயந்தாங்கோழியாக சத்யா, விஷப்பாம்பாக பவித்திரா, இம்சை ராணியாக சௌந்தர்யா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |