அடுத்தடுத்து விஜய் சேதுபதியிடம் சிக்கும் தர்ஷிகா- மிரட்டும் இன்ஸ்டாகிராம் பதிவு
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் தர்ஷிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விமர்சனங்களுக்கு பஞ்சம் இல்லாத விதத்தில் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா தியாகராஜன், வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார் ஆகியோர் பிரபலங்கள் வெளியேறி உள்ளனர்.
இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சாச்சனா, சத்தியா, தீபக், கானா ஜெஃப்ரி, ஆர்.ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா ஜனனி, தர்ஷிகா, அர்ஷிதா, பிஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத், ராணவ், மஞ்சரி, ராயன், உள்ளிட்ட 17 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.
நாட்கள் குறைவாகவும் போட்டியாளர்களின் எண்ணிக்கையை அதிகமாகவும் இருப்பாதால் இரண்டு போட்டியாளரை வெளியேற்றும் முடிவில் பிக்பாஸ் தரப்பு உள்ளது. கடந்த வாரமே டபுள் எவிக்ஷன் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரான சிவக்குமார் வெளியேற்றப்பட்டார்.
கவர்ச்சிக்காட்டும் தர்ஷிகா
இந்த நிலையில், கடந்த நாட்களில் பிக்பாஸ் வீட்டில் தர்ஷிகா செய்த கில்லாடி வேலைகள் அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்ட ஆரம்பித்துள்ளார்.
சௌந்தர்யா, ஜாக்குலின் மற்றும் தர்ஷிகா குறித்து பேசிய விஜய் சேதுபதி, அடுத்ததாக தர்ஷிகா - மஞ்சரி விவாகரம் குறித்து பேசுகிறார்.
குறைவான வாக்குகள் பெற்று கடைசி மூன்றாவது இடத்தில் இருக்கும் தர்ஷிகா சில சமயங்களில் இன்றைய தினம் வெளியேறலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த சமயத்தில் தர்ஷிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது. அத்துடன் விமர்சனக் கருத்துக்களை புகைப்படங்களுக்கு கீழ் குவித்தும் வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |