மொத்தமாக போட்டுடைத்த ரஞ்சித்- மரண கலாய் வாங்கிய வர்ஷினி- இனி நடக்கப்போவது என்ன?
“இந்த பாடசாலைக்கு ஒரு அதிபர் தேவையில்லை..” என ரஞ்சித் வர்ஷினியை கலாய்த்து பேசியதற்கு ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8.
இந்த நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களை கமல் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் அவர் எப்படி தொகுத்து வழங்குவார் என்ற கவலை பிக் பாஸ் ரசிகர்களுக்கு இருந்தது.
தற்போது ரசிகர்களே அசந்து போகும் அளவிற்கு விஜய் சேதுபதி அட்டகாசமாக தொகுத்து வழங்கி வருகிறார்.
யார் என்ன செய்தாலும் சுற்றி வளைத்து பேசாமல் முகத்திற்கு நேராக பேசுவதால் ரசிகர்களுக்கு இந்த சீசன் மிகவும் பிடித்திருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.
வர்ஷினியை தாக்கிய போட்டியாளர்கள்
இந்த நிலையில், 6 ஆவது வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் வர்ஷினி, அருண் இருவரும் அதிபர் மற்றும் உப அதிபர்களாக இருந்து மொத்த போட்டியாளர்களையும் பார்த்து கொள்ள வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் நேற்றைய தினம் அதிபராக வந்த வர்ஷினி, ஜாக்குலினிடம் கடுமையாக நடந்து கொண்டார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், மொத்த போட்டியாளர்களும் இன்றைய தினம் விமர்சனங்களை கொட்டித்தீர்த்துள்ளார்.
இதற்கிடையில் நடிகர் ரஞ்சித், “ இது ஒரு பாடசாலை இதற்கு உப அதிபர் தேவையில்லை, அதே போன்று இதற்கு ஒரு அதிபரும் தேவையில்லை..” என வர்ஷினியை தாக்கி பேசியுள்ளார். இதற்கு மொத்தமாக ஒன்று கூடிய போட்டியாளர்கள் அனைவரும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |