பிக்பாஸ் 7ல் ரசிகர்களுக்காக இப்படியொரு மாற்றமா? அதிரடியாக வெளியான சூப்பர் அப்டேட்!
இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 7 இன் பிக்பாஸ் வீடு இரண்டாக பிரியவுள்ளதாக கமல் அவர்கள் அப்டேட் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ்
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
இது தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி என பன் மொழிகளில் துவங்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய காலப்பகுதியில் பல சர்ச்சைகள் எழுந்தன.
இவை அணைத்தையும் கமல்ஹாசன் அவர்கள் பேசி ஒரு வழியாக சமாளித்து தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இது தான் முதல் இடத்தில் இருக்கின்றது.
இதனை தொடர்ந்து 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், ஏழாவது சீசன் விரைவில் துவங்கும் என கூறப்பட்டது.
அதிரடியாக வெளியான அப்டேட்
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான பிக்பாஸ் சீசன் 7 கான அப்பேட் வெளியாகியுள்ளது.
வழக்கம் போல 100 நாட்கள் பயணம், 20 போட்டியாளர்கள், ஆனால் பிக்பாஸ் வீடு மாத்திரம் இரண்டாக பிரிந்துள்ளது.
இந்த செய்தியை கேட்டு சமூக வலைத்தளங்களில் புதிய பரபரப்பு எழுந்துள்ளது.
அத்துடன் கமல் கொடுக்கும் இந்த ரியாக்ஷன் ரசிகர்களை இன்னும் விறுவிறுப்பாக்கியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |