ஆரம்பமாகப்போகும் பிக்பாஸ் சீசன் 7: வெளியானது சூப்பர் அப்டேட்!
ஆரம்பமாகவிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி முதன்முதலாக அமெரிக்காவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. இது அப்படியே இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ் என பல மொழிகளிலும் ஆரம்பமானது.
இந்நிகழ்ச்சியின் நோக்கமே 100 நாட்கள் ஒரே வீட்டில் டிவி, செல்போன் போன்ற எந்தவொரு தொடர்பாடல் சாதனமும் இல்லாமல் வாக்களின் வாக்குகளை வைத்து தாக்குபிடிக்கபிடிக்க வேண்டும்.
அவ்வாறு இறுதி போட்டி வரை வந்து வாக்குளின் அடிப்படையில் வெற்றியாளராக முடிசூடிவார்கள். அதுபோல தமிழில் 6 சீசன்கள் முடிந்து விட்டது.
அதில் முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகேன் ராவ்வும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும், ஆறாவது சீசனில் அசீமும் டைட்டில் வின்னராக வெற்றிப்பெற்றார்கள்.
பிக்பாஸ் சீசன் 7
இந்நிலையில், சீசன் 6 முடிந்து சீசன் 7க்காக காத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளனர். பிக்பாஸ் 7வது சீசன் அடுத்த மாதம் அதாவது ஜுலை 2வது அல்லது 4வது வாரத்தில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த சீசனில் போட்டியாளர்களை எப்படி தேர்வு செய்வார்கள் என்றுப்பார்த்தால் இரண்டு செலிபிரிட்டிகள், மக்களுக்கு பரீட்சையமில்லாத இரண்டு செலிப்ரட்டிகள், சின்ன திரையை சேர்ந்த இரண்டு நடிகர்கள், தொகுப்பாளர் மற்றும் செய்தி வாசிப்பாளர் இரண்டு பேர், பொதுமக்களில் இருந்து மூன்று பேர், மாடலிங் துறையை சேர்ந்த இரண்டு பேர், சோசியல் மீடியா பிரபலங்கள் இரண்டு பேர், திருநங்கை 1, சமூக சேவை அல்லது அரசியலை சேர்ந்த இரண்டு பேர், பேச்சாளர்கள் இரண்டு பேர், அயல் நாட்டவர்கள் இரண்டு பேர் மற்றும் நடனம் ஆடுபவர்கள் இரண்டு பேர் என தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் எனவும் நம்பப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |