திடீர் ட்விஸ்ட் - சற்றுமுன்னர் பிக் பாஸில் இருந்து வெளியேறிய 2 போட்டியாளர்கள்! கடைசி நொடியில் தப்பிய இலங்கையர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சற்றுமுன்னர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று .
இந்நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் நிறைவடைந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்
மற்ற சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசனில் முதல் வாரத்திலே சண்டைகள் அனல் பறக்க தொடங்கியது.
தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளுக்கான பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.
நாமினேசனில் இப்படி ஒரு ட்விஸ்டா?
இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் இறுதி இடத்தில் இருந்த ஏடிகே கடைசி இரண்டு நாட்களில் தப்பித்து விட்டார்.
இதனால் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல கடந்தவாரம் கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்பட்ட இலங்கை பெண் ஜனனி இந்த வாரம் இரண்டாவதாக அதிக வாக்குகளை பெற்று காப்பாற்றப்பட்டுள்ளார்.