இத ஒளிபரப்பாதீங்க! கீழே விழுந்து கதறிய தனலட்சுமி - பிக் பாஸின் அதிரடி செயல்...லீக்கான வீடியோ
சில காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று பிக் பாஸிடம் தனலட்சுமி வைத்த கோரிக்கை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த இரண்டு வாரமாக தனலட்சுமி செய்யும் செயல்கள் ரசிகர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது.
பிக் பாஸ் தனலட்சுமிக்கு இன்விசிபிள் டாஸ்க் கொடுத்திருந்தார்.
போட்டியாளர்கள் என்ன பண்ணாலும் எதுவுமே செய்யக்கூடாது என்று பிக் பாஸ் அறிவித்தார்.
இதனால் கடுப்பான தனலட்சுமி பிக்பாஸ் இடம் சென்று, நான் இப்போது வீட்டுக்கு போக வேண்டும். எனக்கு மட்டும் இந்த டாஸ்க் கொடுப்பது சரி இல்லை என்று புலம்பினார்.
பிக் பாஸிடம் கெஞ்சிய தனலட்சுமி
பின் சிறிது நேரம் கழித்து பிக் பாஸ் இடம் நான் செய்தது தவறு. என்னை மன்னித்து விடுங்கள். நான் பொறுமையாக இருக்க தான் நீங்கள் இந்த டாஸ்க் எனக்கு கொடுத்தீர்கள். ஆனால், கோபம் என்னை அறியாமல் வந்து விடுகிறது.
Dhanalakshmi asks sorry to Bigg Boss and asks not to telecast this and her saying she wants to go out.
— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 11, 2022
She should not take big decisions like not eating, going out, etc if she can't follow through.
#BiggBossTamil6 pic.twitter.com/j6oDxa1rLY
என்னை மன்னித்து விடுங்கள். நான் அப்படி பேசியதை ஒளிபரப்பாதீர்கள். கஷ்டப்பட்டு தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.
நான் வெளியில் போக விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
இதனை ரசிகர்கள் வைராக்கி வருகின்றனர.