பிக்பாஸுன் அதிரடி.. உடைமையை பறித்த டாஸ்க்- இனி என்ன செய்ய போகிறார்கள்?
பிக்பாஸ் வீட்டிற்கு விளையாட வந்தவர்களுடைய உடைமைகளை பிடுங்கி வைத்து விட்டார்.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது. அதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
இதுவரையில், 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், நேற்றைய தினம் ஆதிரை நான்காவது ஆளாக வெளியேறியுள்ளார்.
ஆதிரை- எப். ஜே இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நடத்திய காதல் லீலைகள் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது.

பார்வதி - கம்ருதீன் இருவரும் செய்யும் வேலைகளுக்கு மக்கள் அவர்கள் பக்கம் உள்ள கொந்தளிப்புக்களை வழங்கி வருகிறார்கள்.
ஆப்பு வைத்த பிக்பாஸ்
இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார்.
அதாவது, பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் உடைமைகளை ஒரு அறையில் வைத்து பூட்டி விட வேண்டும். அதன் பின்னர் அங்கு விளையாட வந்த பிரபலங்கள் தங்களின் உடைமைகளை டாஸ்க் விளையாடி பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வளவு நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மைத்தன்மையை புரிந்து கொள்ளாது விளையாடியவர்களுக்கு இது பெரும் இடியாக இறங்கியுள்ளது.
இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |