மாற்றி பேசி வசமாக மாட்டிய சாண்ட்ரா.. கேமரா சாட்சி- கானா வினோத் அதிரடி
பிரஜன் வீட்டை விட்டு சென்ற பின்னர் மிகுந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் சாண்ட்ரா மாற்றி பேசி, சக போட்டியாளர்களிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் 12 வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி, பிரஜன், ரம்யா ஜோ மற்றும் வியானா ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
சக போட்டியாளர்களை எச்சரித்த கானா வினோத்
இந்த நிலையில், கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் செய்து ரம்யா ஜோ, வியானா இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்த சாண்ட்ரா, தற்போது தனிமையில் இருந்து வருகிறார்.
உள்ளே வரும் பொழுது திவ்யாவுடன் நெருக்கமாக இருந்த சாண்ட்ரா தற்போது அவருக்கு எதிராக மாறி பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

இதனை கவனித்த இந்த வாரத்தின் தலைவர் கானா வினோத், சாண்ட்ராவின் ரகசிய திட்டத்தை மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் புட்டு புட்டு வைக்கிறார்.
அதாவது, சாண்ட்ரா யார் அவரிடம் பேச சென்றாலும் அவர்களுக்கு எதிராக பிரச்சினைகளை மாற்றி விடுகிறார். இதனால் அவரிடம் பேச முடியாது. அமித் தான் சென்று பேசிக் கொண்டிருக்கிறார்.

மேலும், இது உங்க வீடு.. நான் இருப்பது தொந்தரவாக இருந்தால், நீங்கள் தள்ளுங்கள் எனக் கூறி விட்டு சென்றிருக்கலாம்..” எனக் கூற, அதற்கு சாண்ட்ரா, “ என்னுடைய குழந்தைகள் மீது சத்தியமாக நீங்கள் அப்படி அன்று கூறவில்லை..” என்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |